குஜராத் மாநிலம் வதோதராவில் பள்ளியில் மாணவிகள் பாலியல் தொந்தரவு குறித்து தெரிவிப்பதற்காக போக்சோ பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகள், இளம் பெண்கள், வயதான பெண்கள் என அனைத்து வயது பெண்களும் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, பாலியல் பாதிப்புகள் குறித்து தெரிவிக்கும் ‘#Me Too’ தளம் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
குஜராத் மாநிலத்தில் வதோதராவில் உள்ள பள்ளி ஒன்றில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான போக்சோவின் பெயரில் பாலியல் புகார் தெரிவிக்கும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. ரகசியம் காக்கப்படுவதுடன், அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. முன்மாதிரியான இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரவும் வாய்ப்புள்ளது.