நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடி முதலீடு: பிரதமர் மோடி

நாட்டின் முப்படைகளையும் ஒருங்கிணைக்கவும், சீரமைக்கவும் ஒரே தலைமை மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலர் என்ற கடினமான இலக்கை நோக்கி உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டின் கட்டமைப்புகள் மேம்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றவாரு நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெற உள்ளதாக தெரிவித்தார்.

நாட்டு மக்கள் நலமாக வாழ வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கம் என கூறிய மோடி, நீர் வளங்களை பாதுகாக்க ஆறுகள், குளங்களை தூர்வாறும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கு முன்பு காகிதத்தில் மட்டுமே இருந்த திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார். கல்வித்துறையை சர்வதேச தரத்தில் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தீவிரவாத்தை கட்டுப்படுத்த உலக நாடுகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Exit mobile version