பள்ளி அறையின் 4 சுவர்களுக்குள் மாணவர்களின் கல்வியறிவு இருந்துவிடக் கூடாது என்றும், வெளியுலக கல்வியையும் கற்க மாணவர்களை தயார்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
‘21ஆம் நூற்றாண்டில் பள்ளிக் கல்வி’ என்ற தலைப்பில் மத்திய கல்வி அமைச்சகம் நடத்தும் இரண்டு நாள் மாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது. காணொலி மூலம் இம்மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, புதிய இந்தியாவின் தேவைக்கேற்ப தேசிய கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறினார். 30 ஆண்டுகளாக 4 சுவர்களுக்குள் மாணவர்கள் படிக்கும் நிலையை மாற்ற வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தவும், குடும்பங்களுக்கு பெரிமைக்குரியதாக மட்டுமே மதிப்பெண் சான்றிதழ் இருப்பதாகக் கூறிய பிரதமர், புதிய கல்விக் கொள்கை மாணவர்களிடம் தேர்வு பயத்தையும், மன உளைச்சலையும் போக்கி அவர்களின் உள்ளம் அறிவை, அறிவியல் பூர்வமாக வளர்க்கும் எனவும் குறிப்பிட்டார்.
சுற்றுச்சூழல் பற்றிய அறிவு மாணவர்களுக்கு மிகவும் அவசியம் என்றும், எதிர்காலத்தில் மாணவர்களை சிறந்த மனிதராக உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். 5ஆம் வகுப்பு வரை பிராந்திய மொழிகளை மாணவர்களுக்கு கட்டாயமாக கற்றுத் தருமாறு ஆசியர்களிடம் கேட்டுக் கொண்டார்.