வேலூர் திருமண குடும்பத்தினருக்கு, பிரதமர் மோடி அளித்த இன்ப அதிர்ச்சி

ஓய்வுபெற்ற வட்டார மருத்துவ ஆய்வாளர் ராஜசேகரன், தனது மகளின் திருமணத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நேரில் வந்து வாழ்த்த வேண்டும் என அழைப்பிதழை அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து வரும் 11-ம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், ராஜசேகரனுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக புதுடெல்லியில் இருந்து பிரதமர் மோடி கையொப்பமிட்ட வாழ்த்து மடல் வந்தது. அதில், தங்களின் மகள் திருமணத்திற்கு தன்னை அழைத்ததற்கு நன்றி எனவும், மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

திருமண வாழ்த்து மடல் அனுப்பி பிரதமர் மோடி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளதாக ராஜசேகரன் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் இந்த கடிதத்தை தங்களது வீட்டின் சுவற்றில் மாட்டி வைத்துகொள்வதாக் மகிழ்ச்சியாக கூறினர்.

Exit mobile version