எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது: பிரதமர் மோடி

எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலடிக் கொடுத்துள்ளார்.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து அவர் பெயர் நாதுராம் கோட்சே என கமல்ஹாசன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி, எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது என கூறினார். ஒருவர் தீவிரவாதியாக இருந்தால், நிச்சயம் அவர் இந்துவாக இருக்க முடியாது என கூறிய பிரதமர் நரேந்திர மோடி, உலகமே ஒரு குடும்பம் என்பது தான் இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை என்றும் தெரிவித்தார்.

Exit mobile version