கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு வாக்கு வங்கி இந்தியாவில் உள்ளதா அல்லது பாகிஸ்தானில் உள்ளதா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவை தேர்தலையொட்டி, கர்நாடக மாநிலம் சித்ர துர்காவில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், இங்கு உள்ள சிலருக்கு வலிகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதிலும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஒருபடி மேலேபோய், ராணுவ வீரர்களையே சந்தேகித்துள்ளதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
ராணுவ வீரர்களுக்கு எதிராக பேசினால், தனக்கு வாக்கு வங்கி கிடைப்பதாக முதலமைச்சர் குமாரசாமி நினைத்துக்கொண்டு இருக்கிறார் என்று கூறிய பிரதமர் மோடி, அவருக்கு வாக்குவங்கி இந்தியாவில் உள்ளதா அல்லது பாகிஸ்தானில் உள்ளதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.