உலகின் மிகப்பெரிய சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதை ஆற்றின் கரையில் சாது மலையில் சர்தார் வல்லபாய் படேலின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி தொடங்கிய சிலை கட்டுமானப்பணிகள் முடிவடைந்ததையொட்டி சிலை திறக்கப்பட உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக பதவி வகித்தபோது, சர்தார் வல்ல பாய் படேல் சிலை அமைப்பது தொடர்பான பிரசாரத்தை தொடங்கினார். சிலைக்கு தேவையான இரும்பு, பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டது. பொது மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட 135 மெட்ரிக் டன் இரும்பு சிலை அமைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.
State of Unity என்பதை வலியுறுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.