முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் மோடி

இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க இருக்கும் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

டெல்லியில் உள்ள தனது இல்லத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடியை பிரணாப் முகர்ஜி வரவேற்றார். மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு இனிப்பை ஊட்டி விட்டு அவர் வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் பிரதமர் மோடி, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் அறிவும், நுண்ணறிவும் இணையற்றது என குறிப்பிட்டுள்ளார். ராஜதந்திரியான அவர், தேசத்திற்கு ஆற்றிய பணி அழிக்க முடியாதது என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார். 

Exit mobile version