காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்க அதிபரிடம் சமரசம் செய்யுமாறு பிரதமர் மோடி கேட்கவில்லை என இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே சமரசம் செய்ய தயாராக உள்ளாதாகவும், பிரதமர் மோடி காஷ்மீர் விவகாரத்தில் சுமூக தீர்வு எட்ட சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென கோரியதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதை இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் மறுத்தது. மாநிலங்களவையில் பேசிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பிடம் காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்ய கோரவில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். இதனிடையே இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால், அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.