ஜி20 மாநாட்டை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி

ஜி20 மாநாட்டை முடித்துக்கொண்டு ஜப்பானில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லி புறப்பட்டார்.

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றது. இருநாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் ரஷ்யா, சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஒசாகா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, சீன அதிபர் ஜி ஜிங்பிங், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலீனா மெர்க்கல் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பொருளாதாரம், பயங்கரவாதம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஜி20 மாநாட்டில் தலைவர்கள் ஆலோசித்தனர். இந்தநிலையில் 2 நாள் மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இந்தியா புறப்பட்டார்.

Exit mobile version