சிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் நாளை தொடக்கம்

சிறு வியாபாரிகளுக்கும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

“பிரதான் மந்திரி லகு வியாபாரி மான்-தன் யோஜனா” என்ற திட்டத்தின் மூலம் சிறு வியாபாரிகளும் பயன்பெறும் வகையில் ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஜி.எஸ்.டியில் ஆண்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய்-க்கு கீழ் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யும் வியாபாரிகளும் பயன் பெற முடியும்.

இந்த திட்டத்தின் கீழ், 18 முதல் 40 வயது வரை உள்ள வியாபாரிகள் தங்கள் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும். பதிவு செய்துள்ள வியாபாரிகள், தங்களின் 60 வயது நிரம்பிய பிறகு, மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாக கிடைக்கும். நாடு முழுவதும் 3 கோடி சில்லரை வியாபாரிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள்.

Exit mobile version