ஒரு நாட்டின் பிரதமராக இருந்தாலும் எளிமையாக பழகுகிறார் மோடி என்று பியர் கிரில்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரபல தனியார் ஆங்கில தொலைக்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சாகச பிரியரான, பியர் கிரில்ஸ் பங்கேற்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள, ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் படமாக்கப்பட்ட நிகழ்ச்சியில், பிரதமர் மோடியும், பியர் கிரில்ஸும் இருவரும் அடர்ந்த காட்டு பகுதிக்குள் பேசிக் கொண்டே சென்றனர்.
அப்போது உரையாடிய மோடி, “காடு ஆபத்தானது அல்ல, இயற்கைக்கு எதிராக மனிதர்கள் தான் வாழ்கிறார்கள்” என்று கூறினார். இயற்கையை பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று கூறிய மோடி, “50 வருடங்கள் கழித்து இயற்கை பற்றி யாரும் நம்மிடம் கேள்வி கேட்க கூடாது” என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதாகவும், தான் ஒரு நாட்டின் பிரதமராக இருந்தாலும் எளிமையாக பழகுகிறார் என்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பியர் கிரில்ஸ் தெரிவித்துள்ளார்.