சூரத்தில் அமைக்கப்பட்டுள்ள துப்பாக்கி மற்றும் ராணுவ தளவாட தொழிற்சாலையை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, சூரத்தின் ஹஜிராவில் அமைந்துள்ள பிரபல நிறுவனத்தின் துப்பாக்கி தொழிற்சாலையை நாட்டிற்கு அர்ப்பணித்தார். பின்னர், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த துப்பாக்கி ரகங்களை அவர் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.