பசிபிக் தீவு நாடுகளின் வளர்ச்சிக்கு இந்தியா ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இதனிடையே ஃபிஜி, கிரிபாடி, மார்சல் தீவுகள், மைக்ரோனேசியா, நவுரு உள்ளிட்ட பசிபிக் தீவு நாடுகளின் தலைவர்களின் கூட்டத்திலும் மோடி பங்கேற்றார்.
அப்போது பருவநிலை மாற்ற விளைவுகளைக் கட்டுப்படுத்தவும், புதுப்பிக்கவல்ல எரியாற்றல் மேம்பாட்டுக்காகவும் பசிபிக் தீவு நாடுகளுக்கு ஒட்டுமொத்தமாக ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்குவதாகப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.