உலகின் மிகப்பெரிய சிலையான சர்தார் வல்லபாய் படேல் சிலையை, பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ம் தேதி தொடங்கிய கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததையொட்டி சிலை இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
சிலைக்கு தேவையான இரும்பு, பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டது. பொது மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட 135 மெட்ரிக் டன் இரும்பு சிலை அமைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.
State of Unity என்பதை வலியுறுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்த சிலை 182 மீட்டர் உயரம் கொண்டதாகும். அதாவது அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையைப் போன்று இருமடங்கு உயரம் கொண்டது. இச்சிலையினை உருவாக்குவதற்காக 2 லட்சத்து 10ஆயிரம் டன் கட்டுமான கலவை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சிலையினை வடிவமைப்பதற்கு 13 மாதங்களும் 33 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இச்சிலையில் 135-வது மீட்டர் உயரத்தில் பொதுமக்கள் 200 பேர் நின்று பார்வையிடுவதற்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது.