பஞ்சாப்பில் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் 23 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

பஞ்சாப் மாநிலத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் பலியான 23 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள படாலா பகுதியிலுள்ள தனியார் பட்டாசி தொழிற்சாலையில் வெடி விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்தநிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version