தேசத்தை துண்டாட நினைப்போர் தெலங்கானாவை உருவாக்கினர்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

தேசத்தை துண்டாட வேண்டும் என நினைப்போர் ஆந்திராவிலிருந்து பிரித்து தெலங்கானாவை உருவாக்கியிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிகார் மாநிலம் ராம்நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் ஆட்சியில், மாநிலங்கள் அன்பை அடிப்படையாக கொண்டு பிரிக்கப்பட்டதாக கூறினார். பீகாரிலிருந்து ஜார்க்கண்டும், மத்திய பிரதேசத்திலிருந்து சத்தீஸ்கரும், உத்தரபிரதேசத்திலிருந்து உத்தரகாண்டும் பிரித்து உருவாக்கப்பட்டதை குறிப்பிட்டு பேசினார்.

ஆனால் தேசத்தை துண்டாட வேண்டும் என நினைப்போர், ஆந்திராவிலிருந்து பிரித்து தெலங்கானாவை உருவாக்கியிருப்பதாக சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி, இரு மாநிலத்தை சேர்ந்தவர்களும் தெலுங்கு மொழியை பேசினாலும், ஒருவொருக்கொருவர் கண்களை பார்த்து பேச தயங்குவதாக தெரிவித்தார். கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது ஆந்திராவிலிருந்து பிரித்து தெலங்கானா உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version