இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா – ரஷ்யா இடையேயான வருடாந்திர உச்சி மாநாடு ரஷ்யாவில் உள்ள விளாடிவோஸ்டக் நகரில் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ரஷ்யா சென்றடைந்தார். தனி விமானத்தில் விலாடிவோஸ்டக் நகருக்கு சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து விமான நிலையத்தில் ரஷ்யா வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து அதிபர் புதினை மோடி இன்று சந்தித்து பேசுகிறார். அப்போது இருநாட்டு உறவு மற்றும் பாதுகாப்பு, வர்த்தகம், அணுசக்தி குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது இந்தியாவில் மேலும் 6 அணுமின் நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது. இந்தியா-ரஷ்யா இடையே 25 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.