பியர் கிரில்சுடன் பிரதமர் மோடி மேற்கொண்ட சாகச பயணம் இன்று ஒளிபரப்பு

பியர் கிரில்ஸ் உடன் பிரதமர் மோடி உத்தரகாண்ட் வனப்பகுதியில் மேற்கொண்ட சாகச பயணம் இன்றிரவு ஒளிபரப்பப்படுகிறது.

பியர் கிரில்ஸ் என அனைவராலும் அறியப்படும் எட்வர்ட் மைக்கேல் கிரில்ஸ், பிரிட்டனின் சிறப்பு படை அதிகாரியாக பணியாற்றியவர். வனப்பகுதியில் பிரபலங்களுடன் சுற்றி வரும் ரியாலிட்டி ஷோ ஒன்றை அவர் நடத்தி வருகிறார். நடிகர் பென் ஸ்டில்லர், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா போன்றோரை பேட்டி எடுத்த பியர் கிரில்ஸ், Man Vs Wild என்ற நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடி உடன் கலந்துரையாடி உள்ளார்.

உத்தரகாண்டில் உள்ள ஜிம் கோர்பெட் தேசிய பூங்காவில் உள்ள வனப்பகுதிக்குள் எடுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இன்று இரவு 9 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்படுகிறது. பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மை இந்தியா, நீர் மேலாண்மை உள்ளிட்டவை குறித்து பியர் கிரில்சுடன் பிரதமர் மோடி விரிவாக கலந்துரையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Exit mobile version