விடுமுறை நாளையொட்டி அத்திவரதரை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

விடுமுறை நாளான இன்று அத்திவரதரை தரிசிக்க லட்சக்கணக்கானோர் காஞ்சிபுரத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

வரதராஜ பெருமாள் கோயிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த மாதம் 1-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 31 நாட்கள் சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதரை சுமார் 46 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில், கடந்த 1 ஆம் தேதி முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். 35-வது நாளான இன்று இளம் மஞ்சள் மற்றும் நீல நிற பட்டாடையில் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். வார விடுமுறை நாள் என்பதால் அத்திவரதரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் வந்த வண்ணம் உள்ளனர்.

அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Exit mobile version