கார்த்திகை மகாதீபம்: பக்தர்கள் வசதிக்காக 2,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கார்த்திகை மகாதீபத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு 2 ஆயிரத்து 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா டிசம்பர் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையடுத்து, டிசம்பர் 10 ஆம் தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது. இந்நிலையில், மகாதீபத்தை முன்னிட்டு பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சி.பி. சக்கரவர்த்தி, கோயில் நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மகா தீபத்தைக் காண 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், சுமார் 2 ஆயிரத்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும் கோயிலின் உள்ளே, நடமாடும் மருத்துவக் குழுவினரை பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version