சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 34 காசுகள், டீசல் 39 காசுகள் குறைப்பு

 

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 34 காசுகளும் டீசல் விலை 39 காசுகளும் குறைந்துள்ளன.

இது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , சென்னையில், பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 34 காசுகள் குறைந்து லிட்டருக்கு 76 ரூபாய் 01 காசுகளும் , டீசல் நேற்றைய விலையிலிருந்து 39 காசுகள் குறைந்து லிட்டருக்கு 71 ரூபாய் 95 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

கச்சா எண்ணெயின் விலை குறைவால் பெட்ரோல் , டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version