சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் குறைப்பு

சென்னையில் பெட்ரோல் விலை குறைந்தும், டீசல் விலை அதிகரித்தும் காணப்படுகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்படும் மாறுபாட்டிற்கேற்ப இங்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் 73 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் நேற்றைய விலையில் இருந்து 13 காசுகள் அதிகரித்து 68 ரூபாய் 22 காசுகளுக்கு விற்பனை ஆகிறது.

Exit mobile version