சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகள் குறைப்பு

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகளும், டீசலுக்கு 46 காசுகளும் குறைந்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 42 காசுகள் குறைந்து லிட்டருக்கு 73 ரூபாய் 99 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 46 காசுகள் குறைந்து லிட்டருக்கு 69 ரூபாய் 63 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைப்பே பெட்ரோல், டீசல் விலை குறைவுக்கு முக்கிய காரணமாக உள்ளது. தொடரும் விலை குறைவால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Exit mobile version