சென்னையில் பெட்ரோல் விலை 7 காசுகள் குறைந்தது

பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 7 காசுகள் குறைந்தும், டீசல் விலையில் மாற்றமின்றியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை குறித்து எண்ணெய் நிறுவனங்கள் தினமும் விலை நிர்ணயம் செய்து வருகின்றன. இன்றைய விலை நிர்ணயம் இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் குறைந்து லிட்டருக்கு 72 ரூபாய் 41 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி 67 ரூபாய் 38 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Exit mobile version