சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் குறைப்பு

பெட்ரோல் லிட்டருக்கு 5 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு 7 காசுகளாகவும் குறைந்துள்ளன.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் குறைந்து 72 ரூபாய் 36 காசுகளாகவும், டீசல் விலை 7 காசுகள் குறைந்து லிட்டருக்கு 67 ரூபாய் 31 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் குறைந்து வரும் கச்சா எண்ணெயின் விலை குறைப்பைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

Exit mobile version