26-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு – வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

பெட்ரோல், டீசல் விலைகள் 26-வது நாளாக குறைக்கப்பட்டு இருப்பது, வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதால், பெட்ரோல், டீசல் விலைகள் எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து வருகின்றன. அதன்படி, 26-வது நாளாக பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகள் குறைந்து 80 ரூபாய் 56 காசுகளாக உள்ளது. டீசல் விலை 16 காசுகள் குறைந்து ஒருலிட்டர் 76 ரூபாய் 43 காசுகளுக்கு விற்பனை ஆகிறது. தொடர் விலை குறைப்பு வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Exit mobile version