சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகள்-டீசல் 44 காசுகள் குறைப்பு

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகளும், டீசல் 44 காசுகளும் குறைந்து காணப்படுகிறது.

எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 42 காசுகள் குறைந்து லிட்டருக்கு 78 ரூபாய் 46 காசுகளாக உள்ளது. டீசல் நேற்றைய விலையில் இருந்து 44 காசுகள் குறைந்து லிட்டருக்கு 74 ரூபாய் 55 காசுகளாக உள்ளது.

சர்வதேச சந்தையில் தொடர்ந்து கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலை குறைந்து காணப்படுகின்றன. இதனால் தொடர்ந்து குறைந்து வரும் விலையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Exit mobile version