அந்தமான் நிகோபாரில் உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அந்தமான் சென்றுள்ள அவர், சுனாமி நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் பொதுமக்கள் மத்தியில் மோடி உரையாற்றினார்.
வளர்ச்சி என்பது மக்களின் நலனை அடிப்படையாக கொண்டுள்ளது என குறிப்பிட்டார். தொடங்கப்பட்டுள்ள உட்கட்டமைப்புப் பணிகளால் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் செழிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், தொழில் வளர்ச்சி, போக்குவரத்து வசதி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் பொதுமக்கள் பயன்பெருவார்கள் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை பிரதமர் வெளியிட்டார்.