இராமேஸ்வரம் மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பான பாதாள சாக்கடை அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.
இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன. ராமேஸ்வரத்திற்கு, பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வந்ததற்கு, அப்பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தண்ணீர் தேங்கி நிற்பதால், கொசு மற்றும் பூச்சிகளால் நோய்கள் ஏற்பட்டதாகவும், இனி அந்த பிரச்சனை இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.