கனமழை காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ளது. மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், நவராத்திரியை முன்னிட்டு கடந்த 29ம் தேதி முதல் வரும் 8ம் தேதி வரை மொத்தம் 10 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி அளித்திருந்த நிலையில், கனமழை காரணமாக பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டது. நீர் வற்றிய நிலையில் கோயிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.