முன்னாள் திமுக தலைவர் கருணாநிதிக்கு கடலில் பேனா சிலை அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று மீனவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அம்மனுவில் பேனா சிலை அமைப்பதனால் மீனவ கிராமங்கள் மற்றும் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் என்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு உயிர்சேதம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேனா சிலை அமைப்பதால் பல லட்ச மீனவ மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே கடலில் பேனா சிலை அமைக்க உச்சநீதிமன்றம் தடை செய்ய வேண்டும் என்று மனுவில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் மீனவர் நலன்சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்காத விடியா அரசு பேனா அமைக்க நிதி ஒதுக்குவது என்பது மீனவ மக்களின் மீது காட்டும் அலட்சியம் ஆகும்.
இச்செய்தியினை விரிவாக காண்பதற்கு கீழே உள்ள காணொளியை சொடுக்கவும்!