எழுதாத பேனாவிற்கு சிலை.. என்னவாகும் மீனவர்களின் நிலை..?

எழுதாத பேனா சின்னத்திற்காக போராடி மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ள விடியா திமுக அரசு, நீட் உள்ளிட்ட விவகாரங்களில் ஏன் போராடி விலக்கு பெறவில்லை என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க விடியா திமுக அரசு, மத்திய அரசிடம் 15 நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை பெற்றுள்ளது. இது குறித்து விமர்ச்னம் செய்து வரும் பொதுமக்கள், எழுதாத பேனாவிற்காக போராடிய விடியா திமுக அரசு, நீட் உள்ளிட்ட விவகாரங்களில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும் மற்ற திட்டங்களை குறித்து விடியா அரசிடம் மக்கள் கேள்வி அல்லது கோரிக்கைகளை வைத்தால் நிதி இல்லை என்று மதியில்லாமல் கைவிரிக்கிறது விடியா அரசு. எழுதாத பேனாவிற்கு 81 கோடி ரூபாய் எங்கிருந்து வருகிறது. மக்கள் பணம்தானே அது என்று பல கேள்விகள் எழுகின்றன. முக்கியமாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் இந்த பேனா சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மீனவ மக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீனவ மக்கள் கடலையே நம்பி தங்கள் வாழ்வாதாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கடலை தன் சொத்தாக கருதி குடும்ப உறுப்பினர்களுக்கு சிலை எடுக்கிறது திமுக அரசு. அப்படியென்றால் அம்மக்களின் நிலை என்னாகும் என்று கேள்வி எழுகிறது.

Exit mobile version