தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரையிலான கடலோர பகுதிகள் ஆமைகள் இனப்பெருக்கும் செய்யும் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் பேனா சின்னம் அமைப்பது போன்ற கட்டுமானங்கள் மேற்கொள்வதால் ஆமைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதுடன், கடல் வளமும் பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயாணா, நிபணத்துவ உறுப்பினர் சத்திய கோபால் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பத்திரிகைகளில் தான் படித்தது உண்மை என்றால் அது கருத்துக்கேட்பு கூட்டமே இல்லை என்றும், அனைத்து தரப்பினரையும் அழைத்து நடத்தப்பட்டதா? என்றும் புஷ்பா சத்திய நாராயாணா கேள்வி எழுப்பினார். மேலும் இத்திட்டம் குறித்து விரிவான அறிக்கையை தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் மற்றும், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு வழக்கை மார்ச் 2ம் தேதிக்கு ஒத்திவைப்பட்டது.
பேனா நினைவுச் சின்னம் ! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் புதிய உத்தரவு
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: DMKmarina beachNational Green TribunalNew OrderPen memorial
Related Content
கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்க்கு வெறும் 5 தொகுதிகள்... கழட்டிவிடப்படும் தமிழக காங்கிரஸ்?
By
Web team
September 17, 2023
சாதிப் பெயரை சொல்லி திட்டிய பேரூராட்சி தலைவர்! மனமுடைந்து தூய்மைப் பணியாளர் தற்கொலை!
By
Web team
September 12, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! திமுகவிற்குள் உட்கட்சிப் பூசலால் டிஷ்யூம் டிஷ்யூம்!
By
Web team
September 4, 2023