வீரமரணமடைந்த காவலர்கள் நினைவு நாளையொட்டி, சிவகங்கை அருகே அரசனூரில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்திய சீன எல்லையில் வீரமரணம் அடைந்த காவலர்களின் நினைவு தினம் வரும் 21ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சிவகங்கை அருகே அரசனூரில், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு பயிற்சி வீரர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
சமத்துவபுரத்தில் இருந்து இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு பயிற்சி மையம் வரையிலான 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்தப் போட்டியில், பயிற்சி வீரர்கள் மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
முன்னதாக பாதுகாப்பு பயிற்சி மையத்தின் கமாண்டர் ஜஸ்டின் ராபர்ட் மற்றும் கல்லூரி முதல்வர் பழனிச்சாமி ஆகியோர் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
முதல் 10 இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.