பாக். நாடாளுமன்ற சபாநாயகராக இம்ரான் கான் கட்சி வேட்பாளர் தேர்வு

பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு கடந்த ஜூலை 25ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காதநிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின்  தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி கூடுதல் இடங்களைகைப்பற்றியது. சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் இம்ரான் கான் ஆட்சி அமைக்க உள்ளார். கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றம் கூடியபோது,  புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.  இந்தநிலையில், சபாநாயகருக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில், இம்ரான்கானின் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின், மூத்த தலைவர்களில் ஒருவரான ஆசாத் கைசர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.  அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.  
Exit mobile version