திருப்பதி மலையில் பத்மாவதி திருக்கல்யாண நிகழ்ச்சி கோலாகலம்

திருப்பதி மலையில் பத்மாவதி திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

புராண காலத்தில் ஏழுமலையானுக்கும் பத்மாவதி தாயாருக்கும் நடைபெற்ற திருக்கல்யாணத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நாராயணகிரி பூந்தோட்டத்தில் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். திருவிழாவை முன்னிட்டு நாரயணகிரி பூந்தோட்டம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

திருக்கல்யாண உற்சவத்தின் முதல் நாளில் மலையப்ப சுவாமி ராஜ அலங்காரத்தில் சர்வ திருவாபரணம் பூண்டு தங்க கஜ வாகனத்தில் எழுந்தருளி நாராயணகிரி பூந்தோட்டத்தை ஊர்வலமாக சென்றடைந்தார். தொடர்ந்து உபய தேவியர்களான ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய உற்சவர்கள் பல்லக்கில் எழுந்தருளி வடக்கு மாட வீதி வழியாக நாராயணகிரி பூந்தோட்டத்தை சென்றடைந்தனர். பின்னர் தேவஸ்தான அர்ச்சகர்கள் ஆகம முறைப்படி பத்மாவதி திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version