ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரப்பன்சத்திரம் ஜான்சி நகரில், கழக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி ஒயிலாட்டம் ஆடி வாக்கு சேகரித்தார். அப்போது ஒன்றிய கழகச் செயலாளர் வி.பி கந்தசாமி எம்எல்ஏ, கழக இளைஞரணி துணை செயலாளர் டிகே.அமுல்கந்தசாமி எம்எல்ஏ, அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் தோப்பு க.அசோகன், கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஆர். சந்திரசேகர், ஒன்றிய கழக செயலாளர்கள் விபி.கந்தவேல், அப்புசாமி, கார்த்திக் அப்புசாமி, ஆர்.செந்தில்குமார், பகுதி கழக செயலாளர் லாலி ரோடு விஜய், இளைஞர் அணி மாவட்ட தலைவர் வடவள்ளி கருப்புசாமி, எம்.பிரபு, மாணவரணி மாவட்ட செயலாளர் டி.ஜேம்ஸ்ராஜா, வட்ட கழக செயலாளர் குஞ்சாலி உள்பட பலர் உடனிருந்தனர்.
மக்களோடு மக்களாக ஒயிலாட்டம் ஆடி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!
