மருத்துவ சீட்டை காப்பாற்ற வக்கில்லாத அரசு நீட்டை ஒழிக்கப்போகிறதா? – அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி கண்டனம்!

அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம், அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி அவர்கள் எழுச்சியுரை

எதுவுமே செய்யாத ஆட்சியின் திமுக ஆட்சி. எதுவும் தெரியாத முதலமைச்சர் முக ஸ்டாலின். இந்தியாவிலேயே முதன்மையான முதலமைச்சர் என்று சொல்கிறார்கள். எதில் முதன்மை என்று தெரியவில்லை. 30000 கோடி கொள்ளையடிப்பதில் தான் முதன்மை இவர்கள். இந்த கூட்டம்தான் திமுகவிற்கு சாவுமணி. முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உண்மையைத் தான் பேசுவார். அதனால்தான் துறையை மாற்றிவிட்டார்கள்.

ஒரு லோடு மண்  சொந்த இடத்தில் எடுத்தால் ஸ்டாலினின் ஆட்கள் வந்துவிடுவார்கள். நம்முடைய கனிம வளத்தை கேரளாவிற்கு கடத்துகிறார்கள் திமுகவினர். திமுகவிற்கு உழைத்தவர்கள் ரோட்டில் தான் இருக்கிறார்கள். திமுகக்காரர்கள் திமுகவை விட்டு ஒதுங்கி அண்ணா திமுகவில் வந்து சேர்கிறார்கள். அவர்களுக்கே தெரிகிறது எது சரியான கட்சி என்று. முதலமைச்சராக இருக்கும்போது எடப்பாடியார் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்து பல மாணவர்களின் மருத்துவக் கனவை நினைவாக்கினார். ஆனால் இப்போது 500 இடங்களுக்கான மருத்துவ சீட்டை காப்பாற்ற முடியவில்லை. சிசிடிவி கேமாரா, பயோமெட்ரிக் இல்லை என்று மூன்று அரசு மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகியுள்ளது. மருத்துவ சீட்டை காப்பாற்ற வக்கில்லாத அரசு நீட்டை ஒழிக்கப்போகிறதா?

ஆர்.எஸ்.புரம் சப் இன்ஸ்பெக்டரை திமுகக்காரன் அறைகிறான். பொதுக்கூட்டத்தில் காவல்துறையை சேர்ந்த பெண் போலிஸ்காரர்களை மானபங்கம் படுத்துகிறான் திமுகக்காரன். கள்ளச்சாராய சாவுகள் பெருகிவிட்டது. நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்கிறார் முதலமைச்சர். எந்த நலத்திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. சொத்துவரி, பால்விலை, மின்சாரம் ஆகியவற்றின் வரிகளை அதிகப்படுத்தி விட்டது திமுக அரசு. வெளிநாடுகளுக்கு சென்றது முதலீடுகளை ஈர்க்கவா? அல்ல 30 ஆயிரம் கோடியை முதலீடு செய்யவா என்று எடப்பாடியார் கேட்டுள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் ஆவார். இந்த ஆட்சியை நாம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

முதியவர் பென்சன் அனைவருக்கும் கொடுத்தோம். ஆனால் அதனை ரத்து செய்தது திமுக. வயதானவர்களின் சாபம் சும்மா விடுமா? எட்டு மணி நேரம் வேலையை 12 மணி நேரமாக மாற்றினார். மீண்டும் அதை திருப்பி வாங்கிவிட்டு, ரத்து செய்ததை பெருமையாக பேசுகிறார். அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பதும் வெல்வோம்.

Exit mobile version