மதுரை மாநாடு திமுகவை ஆட்சியில் இருந்து விரட்டும்! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விமர்சனம்!

மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குரல் கொடுத்தது கூட தெரியாமல், முதல்வர் ஸ்டாலின் உள்ளார் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடுமையாக சாடியுள்ளார்.

மதுரையில் ஆகஸ்டு 20ஆம் தேதி, அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறும், வலையங்குளம் கருப்பசாமி கோயில் இடத்தை, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, சி.விஜயபாஸ்கர், மணிகண்டன், எம்எல்ஏ ராஜன்செல்லப்பா ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் முன்னாள் அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாடு, விடியா திமுகவை ஆட்சியில் இருந்து விரட்டும் மாநாடு என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மணிப்பூர் விவகாரத்தில் முதல்முதலாக குரல் கொடுத்தவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தான் எனவும், மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் குரல் கொடுத்தது கூட தெரியாமல், முதல்வர் ஸ்டாலின் உள்ளார் எனவும் சாடினார். அத்துடன் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்தில் 58 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக வேதனை தெரிவித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக தான் எனவும் பெருமிதம் தெரிவித்தார். மேலும் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்காமல் அடிமையாக இருப்பது திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் தான் என விமர்சித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டுமென மக்கள் முடிவெடுத்து விட்டதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version