அதிமுக யாருக்கும் அடிமை அல்ல, விடியா திமுகவினர்தான் அடிமைகள் – அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணி மாஸ் பேச்சு!

விலைவாசி உயர்வைக் கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதனையொட்டி கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பின்வருமாறு பேசியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி…

முடியும் தருவாயில் உள்ள அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை விடியா திமுக அரசு இழுத்தடிப்பு செய்து வருவதாக அதிமுகவின் தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவையில் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கர்நாடகா வரை சென்ற முதல்வர் மேகதாது குறித்து எதுவும் பேசவில்லை என குற்றம்சாட்டினார். மேலும் விடியா முதல்வர் விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறார் என்றும் காட்டமாக தெரிவித்தார்.

அதிமுக யாருக்கும் அடிமை அல்ல என்று குறிப்பிட்டு பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும்தான் அடிமையாக இருப்பதாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கழிவு பஞ்சு ஆலைகளின் வேலைநிறுத்தத்தால் ஏராளமான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கொண்டு வந்த திட்டங்களையே ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைக்கிறார் என விமர்சித்தார்.

மேலும் முடியும் தருவாயில் உள்ள அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை விடியா அரசு இழுத்தடிப்பு செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாகவும், கோவை மாவட்டத்திற்கு எந்த ஒரு நலத்திட்டங்களும் வரவில்லை என குற்றம்சாட்டினார். மேலும் கோவை டிஐஜி தற்கொலை தொடர்பாக வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார்.

Exit mobile version