நிலவை எட்டுவதற்கான நம் பயணம் தொடரும்: பிரதமர் மோடி

இந்தியாவின் நிலவை தொடும் முயற்சி நிச்சயம் நிறைவேறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினர். இந்திய நாட்டின் கனவிற்காக உழைக்கும் விஞ்ஞானிகளை நாடு மதிப்பதாக அவர் தெரிவித்தார். நிலவை எட்டுவதற்கான நமது பயணம் தொடரும் எனவும், விண்வெளி சக்தி கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது என கூறிய பிரதமர் மோடி, நாட்டிற்காக உழைக்கும் விஞ்ஞானிகளை நாடு பெருமையுடன் பார்ப்பதாக குறிப்பிட்டார்.

விஞ்ஞானிகளுடன் தானும் நாட்டு மக்களும் இருப்பதாக அவர் கூறினார். விஞ்ஞானத்தில் தோல்வி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என கூறிய மோடி, நமது விஞ்ஞானிகளின் உழைப்பே இந்தியா, செவ்வாய் கிரகத்தை தொடுவதற்கு காரணமாக இருந்தது எனவும் பாராட்டு தெரிவித்தார்.

நமது விண்வெளி திட்டங்களில் புதிய உச்சங்கள் இனிமேல் தான் வரவுள்ளது எனவும், இரவு பகலாக உழைத்த விஞ்ஞானிகளில் உழைப்பு வீண் போகாது என நம்புவதாக அவர் கூறினார்.

விஞ்ஞானிகள் மத்தியில் ஊக்க உரையை நிறைவு செய்த பிரதமர் மோடி, விஞ்ஞானிகளுக்கு கைக்கொடுத்து தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பெங்களூர் இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் பேசிவிட்டு கிளம்பிய பிரதமர் மோடியிடம், இஸ்ரோ தலைவர் சிவன் கண்கலங்கி தனது மனநிலையை வெளிப்படுத்தினார். பிரதமர் மோடி, சிவனை ஆரத் தழுவி தேற்றி, ஆறுதல் கூறினார். இச்சம்பவம் அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைத்தது.

Exit mobile version