அமெரிக்க காதலரை மணந்த ’ஒஸ்தி’ பட ஹீரோயின்..காரணம் இது தானா ?

நடிகர் சிம்பு நடித்த ’ஒஸ்தி’ படத்தில் ’நெடுவாலி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ரிச்சா கங்கோபத்யாயா.ஒஸ்தி திரைப்படத்திற்கு பிறகு ’மயக்கம் என்ன’ திரைப்படத்தில் தனது நடிப்பின் மூலம் அனைவரையும் வியக்க வைத்தார்.தமிழ் சினிமாவில் இரண்டே படம் என்றாலும் பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ரிச்சாவிற்கு அமெரிக்காவை சேர்ந்த ஜோ என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது.இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், பெற்றோர் சம்மதத்திற்காக இத்தனை நாள் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களின் திருமணம் ஹிந்து முறைப்படியும், கிறிஸ்துவ முறைப்படியும் நடந்துள்ளது.தற்போது இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், இந்த புது தம்பதியினருக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருமணம் முடிந்த கையோடு இருவரும் அமெரிக்காவில் செட்டில் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Exit mobile version