வீட்டுவசதி வாரியத்தின் விரிவான திட்டங்கள் குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசனை !!!

வீட்டுவசதி வாரியத்தின் விரிவான திட்டங்கள் குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
வீடு இல்லாத மக்களுக்கு, 2023ஆம் ஆண்டுக்குள் வீடு வழங்கும் என்ற திட்டத்தின் கீழ் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தற்போது வரை 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. விரைவில் புதிதாக 6 லட்சம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறையில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும், செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். அப்போது வீட்டு வசதி வாரியம் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை விரைந்து செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கினார். ஆலோசனைக் கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version