ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று காஷ்மீர் பயணம்

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று காஷ்மீர் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு மக்கள் ஆதரவு அளித்து வரும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காஷ்மீர் விவகாரத்தை அரசியலாக்கி வருகின்றனர். இந்த நிலையில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று அங்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஷ்மீர் நிலவரத்தை நேரில் காண, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் 9 பேர் இன்று காஷ்மீர் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version