திருநெல்வேலி மாவட்டத்தின் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பாசனத்திற்காகவும் குடிநீர்த் தேவைக்காகவும் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர், 3 அணைகளிலிருந்தும் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார்.
நாளை முதல் செப்டம்பர் 9 வரை தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. இந்த நீர் திறப்பினால் அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை வட்டங்களில் உள்ள சுமார் 24 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி உயர் மகசூலைப் பெற வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.