பிளாஸ்டிக் தடை எதிரொலியால் மெரினா கடற்கரையில் குப்பைகள் குறைவு

பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை எதிரொலியாக, மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகள் குறைந்தது.

காணும் பொங்கலை யொட்டி, மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. வழக்கமாக மெரினாவில் பொதுமக்கள் அதிகளவு கூடும் போது, பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து காணப்படும். பிளாஸ்டிக் தடை காரணமாக இந்த ஆண்டு, குப்பைகள் குறைந்தன. கடற்கரையில் ஆங்காங்கே குப்பை கூடைகள் வைக்கப்பட்டிருந்ததால், மணற்பரப்பில் குப்பைகள் குறைந்த அளவே இருந்தது. கடந்த ஆண்டு மெரினா கடற்கரையில் 27 மெட்ரிக் டன் அளவிலும், பெசன்ட் நகர் கடற்கரையில் 15 மெட்ரிக் டன் அளவிலும் மொத்தம் 42 மெட்ரிக் டன் குப்பை அகற்றப்பட்டது. இந்த ஆண்டு மொத்தமாக 12 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

Exit mobile version