உலகளவில் முதலிடம் – சிறந்த மருத்துவமனையாக அரசு ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தேர்வு!

கொரோனாவுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு, இந்திய சுகாதார நிறுவனங்களின் ஒருங்கமைப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய்தொற்றுக்கு மருத்துவர்களின் சிறப்பான சேவை, சரியான மருத்துவ உபகரணங்கள், செவிலியரின் கனிவான அணுகுமுறை, நோயாளிகளுக்கு உளவியல் ஆலோசனைகள், மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பு என அனைத்திலும் அரசு மருத்துவமனைகள் சிறப்பான பணியை செய்து வருகின்றன.

கொரோனா சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் முதன்முதலில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து இங்கு சிறப்பான தனிமைப்படுத்துதலுடன் கூடிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா காலகட்டத்தில், பணியாளர்கள் மற்றும் பணி அமைவிட பாதுகாப்பில் மிகச் சிறப்பான செயல்பாட்டிற்காக, இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகளுக்கான விருதுகளை அறிவிக்கும் இந்திய சுகாதார நிறுவனங்களின் ஒருங்கமைப்பான CAHO அமைப்பு, ஓமந்தூரார் மருத்துவமனையை தேர்வு செய்துள்ளது.

300 முதல் 600 படுக்கை கொண்ட மருத்துவமனைகளில், ஓமந்தூரார் மருத்துவமனை முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 18,200 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Exit mobile version