ஆஸ்திரேலிய ஓபன்: ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கனடாவின் டெனிஸ் ஷபோவாலோவை எதிர் கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி ஜோகோவிச் 6 க்கு 3, 6 க்கு 4, 4 க்கு 6, 6 க்கு பூஜ்ஜியம் என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அவர், 4-வது சுற்றில் ரஷ்யாவின் டேனில் மெட்விடேவை எதிர்கொள்ள உள்ளார்.

இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் ஜப்பானை சேர்ந்த 9 ஆம் நிலை வீரரான கெய் நிஷிகோரி போர்ச்சுகலை சேர்ந்த ஜோவாவ் சவுசாவை 7 க்கு 6, 6 க்கு 1, 6 க்கு 2, என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நிஷிகோரி, 4 ஆம் சுற்றில் ஸ்பெயினின் பப்லோ கரீனோ புஸ்டாவை எதிர் கொள்ள உள்ளார்.

Exit mobile version