ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதியில், நடப்பு சாம்பியனான செர்பிய வீரர் ஜோகோவிச், சுவீஸ் வீரரான ரோஜர் பெடரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதியில், நடப்பு சாம்பியனான செர்பிய வீரர் ஜோகோவிச்- நட்சத்திர வீரரான சுவீஸ் நாட்டைச் சேர்ந்த ரோஜர் பெடரர் எதிர்கொண்டார். முன்னணி வீரர்களான இருவரும் முதல் செட்டை கைப்பற்றுவதில் மாறி மாறி புள்ளிகளை குவித்தனர்.

இந்நிலையில் சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் முதல் செட்டை 7க்கு 6 என்ற கணக்கில் கைப்பற்றினார். அடுத்து ஆவேசமாக ஆடிய ஜோகோவிச் 6க்கு 4, 6க்கு 3 என்ற செட் கணக்கில் பெடரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று மதியம் நடக்கும் 2வது அரையிறுதியில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ்-ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் மோதுகின்றனர்.

Exit mobile version